யுத்தம் குறித்த அனைத்து ஆவணங்களையும் ஆராயவுள்ள ஜனாதிபதியின் நிபுணர் குழு தருஷ்மன் அறிக்கையும் உள்ளட

Wednesday, 23 July 2014 08:17 Anton Philip
Print

இலங்கை மனித உரிமை விவ­காரம் குறித்த தருஷ்மன் குழுவின் அறிக்கை உள்­ளிட்ட

யுத்தம் தொடர்­பான அனைத்து பொது ஆவ­ணங்­­ளையும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­­க் ­வி

னால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள சர்­­தேச நிபுணர் குழு ஆரா­­வுள்­­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முரண்­பா­டுகள் நில­வு­கின்ற விட­யங்கள் குறித்து அர­சாங்­கத்­தி­டமும் இரா­ணு­வத்­தி­டமும் விளக்­கங்­களை கோருவோம் எனவும் சர்­­தேச நிபுணர் குழுவின் உறுப்­பி­னர்கள் குறிப்­பிட்­டுள்­ளனர்.

இலங்­கையின் இறுதிக் கட்ட யுத்தம் தொடர்­பாக ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூனுக்கு ஆலோ­சனை வழங்­கு­­தற்கு நிய­மிக்­கப்­பட்ட தருஷ்மன் தலை­மை­யி­லான நிபுணர் குழுவின் அறிக்­கையை சர்­­தேச நிபுணர் குழு விரி­வாக ஆரா­­வுள்­­தாக நிபுணர் குழுவின் உறுப்­பி­னர்­களில் ஒரு­­ரான சேர் ஜெப்ரி நைஸ் ஊடகம் ஒன்­றுக்கு தெரி­வித்­துள்ளார்.

யுத்தக் குற்றம் தொடர்­பாக விசா­ரிப்­­தற்கு உள்­ளக ரீதியில் நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஆணைக்­கு­ழு­வுக்கு ஆலோ­சனை வழங்­கு­மாறு நாங்கள் கேட்­கப்­பட்­டுள்ளோம் என்றும் அவர் கூறி­யுள்ளார். ''யுத்தம் தொடர்­பான அனைத்து பொது ஆவ­ணங்­­ளையும் நாங்கள் ஆரா­­வுள் ளோம். முரண்­பா­டுகள் நில­வு­கின்ற விட­யங்கள் குறித்து அர­சாங்­கத்­தி­டமும் இரா­ணு­வத்­தி­டமும் விளக்­கங்­களை கோருவோம் என்றும் சேர் ஜெப்ரி நைஸ் கூறி­யுள்ளார். இதே­வேளை இலங்­கையின் சிவில் யுத்தம் குறித்தும் அதன் சவால்கள் மற்றும் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பா­கவும் தான் நன்கு அறிந்­துள்­­தாக சர்­­தேச நிபுணர் குழுவின் மற்­று­மொரு உறுப்­பி­­ரான பேரா­சி­ரியர் டேவிட் கிரேன் குறிப்­பிட்­டுள்ளார். அந்­­­கையில் குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து தற்­போது பொது­வான முறையில் முன்­வைக்கப்­பட்­டுள்ள அனைத்து ஆவ­ணங்­­ளையும் தான் ஆரா­­வுள்­­தா­கவும் அவர் கூறி­யுள்ளார்.

''திறந்த மன­துடன் இந்த நட­­டிக்­கை­கையை முன்­னெ­டுக்க நான் வந்­துள்ளேன். அந்­­­கையில் உள்­ளக ஆலோ­சனைக் குழு­வுக்கு எனது சட்ட ஆலோ­­னை­களை வழங்­கவுள்ளேன்'' என்று பேரா­சி­ரியர் டேவிட் கிரேன் குறிப்­பிட்­டுள்ளார்.சர்­­தேச குற்­­வியல் நீதி­மன்ற விசா­­ணை­களில் அனு­பவம் மிக்க மூன்று அதி­கா­ரிகள் காணாமல் போனோர் தொடர்­பாக விசா­ரிக்கும் ஆணைக்­கு­ழு­வுக்கு நிய­மிக்­கப்­பட்­டுள்­­தாக ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் கடந்­­வாரம் அறி­வித்தார். இந்தக் குழு­வுக்கு சேர் டெஸ்மன் டி சில்வா தலைமை தாங்­கு­கின்றார். இவ­ருடன் சேர் ஜெப்ரி நைஸ் மற்றும் டேவிட் க்ரேய்ன் ஆகியோர் இடம்­பெ­று­கின்­றனர். ஆணைக்­கு­ழு­வுக்கு ஆலோ­சனை வழங்­கு­­தற்­காக மூவர் கொண்ட குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­­துடன் காணா­மற்­போனோர் தொடர்­பான முறைப்­பா­டு­களை விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் ஆணை பரப்­பையும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்‌ஷ விரி­வு­­டுத்­தி­யுள்ளார்.

அதா­வது யுத்த காலத்தில் இழைக்­கப்­பட்­­தாகக் கூறப்­படும் சர்­­தேச மனி­தா­பிமான சட்­­திட்­டங்­களை ஆராய்ந்து அறி க்கை சமர்ப்­பிப்­­தற்­கு­ரிய பொறுப்பு இந்த குழு­விடம் ஒப்­­டைக்­கப்­பட்­டுள்­ளது. அந்­­­கை­யி­லேயே இதன் ஆணை விரி­வாக் கம் செய்­யப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் தேவைப்­படும் போது மேலும் ஆணைக்­கு­ழு­வுக்கு நிபு­ணர்கள் நிய­மிக்­கப்­­டலாம் என்றும் ஜனா­தி­பதி பேச்­சாளர் அலு­­லகம் குறிப்­பிட்­டுள்­ளது. தற்­போது நிய­மிக்­கப்­பட்­டுள்ள சர்­­தேச நிபுணர் குழுவுக்கு ஆயுத மோதல்கள் தொடர்­பான சட்­டங்கள் குறித்த நிபு­­ரான சேர் டெஸ்மன்ட் டி. சில்வா தலைமை தாங்­கு­கின்றார். அத்­துடன் நிபுணர் குழுவில் இடம்­பெ­று­கின்ற மற்­று­மொரு உறுப்­பி­­ரான சேர் ஜெப்றி நைஸ் லண்­டனில் சர்­­தேச சட்­­திட்டங்கள் குறித்த பேரா­சி­ரி­­ராக உள்ளார். மேலும் மூன்­றா­வது உறுப்­பி­­ரான பேரா­சி­ரியர் டேவிட் கிரேன் சிரா லியோன் தொடர்­பான விசேட நீதி­மன்­றத்தில் பிர­தான பதவி ஒன்றில் ஐக்­கிய நாடு­களின் முன்னாள் செய­லாளர் நாய­கத்­தினால் தனிப்­பட்ட ரீதியில் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார்.